அக் 18 முதல் இந்த எட்டு நாட்டு மக்களும் அமெரிக்கா செல்ல முடியாது!

Sep 25, 17

வாஷிங்டன்: வடகொரியா, ஈரான் உள்ளிட்ட 8 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் ட்ரம்ப் விதித்த தடை வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ட்ரம்ப் பதவி ஏற்ற கையோடு, அமெரிக்க மக்களின் பாதுகாப்பு, தீவிரவாதத் தடுப்பு ஆகிய காரணங்களை முன் வைத்து அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதில் முக்கியமானது குறிப்பிட்ட சில நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடை. இதை எதிர்த்து அந்நாட்டில் வழக்குகள் தொடரப்பட்டாலும், ட்ரம்பின் நடவடிக்கைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எனவே ட்ரம்ப் அறிவித்த பயண தடை சட்டம் முதல் கட்டமாக வரும் அக்டோபர் 18 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, வடகொரியா, வெனிசுலா, ஈரான், சாட், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா ஆகிய நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட மேற்கண்ட நாடுகளின் அரசு அதிகாரிகள், அதிகாரப்பூர்வமான சந்திப்புகளில் பங்கேற்க மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.