அமெரிக்காவில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள் ... ஒரே வருடத்தில் இத்தனை கொலைகளா?

Nov 06, 17

அமெரிக்காவில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்கள் ... ஒரே வருடத்தில் இத்தனை கொலைகளா?

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாலிபர் ஒருவர் நேற்று தேவாலயத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இவர் நடத்திய மோசமான துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர். அதேபோல சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கவின் லாஸ் வேகாஸ் பகுதியில் மிக மோசமான அளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 50க்கும் அதிகமான மக்களை பலியாகினர். கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் மிக அதிக அளவில் துப்பாக்கி சூடும் தீவிரவாத தாக்குதலும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் 10க்கும் அதிகமான கோர தாக்குதல்கள் நடந்து இருக்கிறது.