அமெரிக்காவில் மீண்டும் இந்தியர்கள் 2 பேர் படுகொலை...

Feb 02, 18

இந்திய வம்சாவளியை சேர்ந்த அம்மா, மகன் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் மீண்டும் இந்தியர்கள் 2 பேர் படுகொலை...

நியூயார்க்: அமெரிக்காவில் தற்போது மீண்டும் நிறவெறி அதிகரித்து வருகிறது. முன்பு கருப்பின மக்கள் அந்த நாட்டில் அதிகம் துன்புறுத்தப்பட்டார்கள். தற்போது இந்தியர்களுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல்கள் நடந்து வருகிறது. முக்கியமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து இந்த சம்பவங்கள் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அம்மா, மகன் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

அங்கு இருக்கும் நிறுவனம் ஒன்றில் மாலா மன்வாணி (65) வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய மகன் ரிஷி மன்வானியுடன்(32) வசித்து வருகிறார். மாலா ஒருவாரமாக வேலைக்கு வரவில்லை என்று அவர் தோழி போலீசில் புகார் அளித்துள்ளார்.

மரணம் இந்த நிலையில் போலீஸ் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளது. அங்கு இருவரும் சுடப்பட்டு கிடந்துள்ளனர். உடனே அவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் போலீஸ் பக்கத்து வீட்டு நபர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

திட்டம் கொலை நடந்த விதத்தை பார்த்தால் இது திட்டமிட்டு நடந்த கொலை போல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இருவர் உடலிலும் அதிக அளவில் குண்டுகள் பாய்ந்து இருக்கிறது. இது நிறவெறி காரணமாக நடந்த கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

மர்மம்

2015ல் ரிஷியின் அண்ணன் அதிக அளவு போதை பொருள் பயன்படுத்தி மரணம் அடைந்துள்ளார். அப்போதே இவர்கள் வீட்டில் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஒருவேளை இந்த கொலை போதை பொருள் வியாபாரம் தொடர்பாக நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.