அரிதிலும் அரிதாக உடலுக்கு வெளியே அமைந்த இதயம்.. 8 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

Sep 22, 17

ப்ளோரிடா: அமெரிக்காவில் வசிக்கும் ரஷ்ய சிறுமிக்கு பிறந்ததிலிருந்து இதயம் வெளியே துடித்து வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் விர்சாவியா போரன். 8 வயது சிறுமியான இவர் அரிய வகை பிறவி நோயான பென்டாலஜி ஆப் கான்ட்ரல் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இவருக்கு இதயம் உடலுக்கு வெளியே வளர்ந்து துடித்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற அரிய வகை நோயால் 5.5 கோடி பேரில் 10 லட்சம் பேருக்கு ஏற்படும்.