இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் வீரேந்திர ஷேவாக் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Oct 20, 17

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பேட்டிங்கின் இலக்கணத்தையே மாற்றி எழுதியவர்களில் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக்கும் ஒருவர். எந்த கட்டத்திலும் எந்த பவுலரின் பந்துவீச்சையும் அடித்து ஆடக்கூடியவர்.

இந்திய அணிக்காக இரட்டைச் சதம் மற்றும் முச்சதம் அடித்து சாதனை படைத்தவர். இந்திய அணிக்காக வீரேந்திர ஷேவாக் 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 8,273 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ரன்கள் குவித்துள்ளார்.

 கடந்த 2015ஆம் ஆண்டும் ஓய்வு பெற்ற வீரேந்திர சேவாக், இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அனில் கும்ளே, பார்த்தீவ் பட்டேல், முகமத் ஷமி, கிறிஸ் கெய்ல் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.