இந்திய ஓபன் காலிறுதியில் சிந்து, சாய்னா.!!

Feb 02, 18

பல்கேரியாவின் லிண்டா ஜெட்சிரியை 21-10, 21-14 என்ற செட்களில் சிந்து வென்றார். சாய்னா நெஹ்வால்,21-12, 21-11 என்ற செட்களில் டென்மார்க்கின் லைன் ஹஜ்மார்க்கை வென்றார்.

காலிறுதியில் சாதித்த சிந்து, சாய்னா...

டெல்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் பி.வி. சிந்து, முன்னாள் சாம்பியன் சாய்னா நெஹ்வால் முன்னேறினர். அதே நேரத்தில் முன்னாள் சாம்பியனான கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறினார். உலக பாட்மின்டன் கூட்டமைப்பின் உலகச் சுற்று போட்டிகளில் ஒன்றான இந்திய ஓபன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டங்களில் வென்று, நடப்பு சாம்பியன் பி.வி. சிந்து, முன்னாள் சாம்பியன் சாய்னா நெஹ்வால் காலிறுதிக்கு முன்னேறினர். அதே நேரத்தில் முன்னாள் சாம்பியனான கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறினார். வயிற்று தசைப் பிடிப்பால் அவதிபட்டு வந்த ஸ்ரீகாந்த், இந்தாண்டில் பங்கேற்கும் முதல் போட்டித் தொடர் இதுவாகும்.

உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அவர், மலேசியாவின் இஸ்காந்தர் ஜூல்கார்னைனிடம் 21-19, 21-17 என்ற செட்களில் தோல்வியடைந்தார். மகளிர் பிரிவில் பல்கேரியாவின் லிண்டா ஜெட்சிரியை 21-10, 21-14 என்ற செட்களில் காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து. இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் பைனல் வரை முன்னேறிய சாய்னா நெஹ்வால்,21-12, 21-11 என்ற செட்களில் டென்மார்க்கின் லைன் ஹஜ்மார்க்கை வென்றார். ஆடவர் பிரிவில் பி. சாய் பிரனீத், பி. கஷ்யப், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.