இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட்

Oct 14, 17

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டி-20 போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால், இரு அணிகளும் கடும் போட்டிக்கு தயாராகி வருகின்றன. 

ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர். 

இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், போட்டி பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.