இந்தியாவின் பணக்கார மாநிலங்கள், ஏழை மாநிலங்கள் எதெல்லாம் தெரியுமா?

Nov 20, 17

டெல்லி: இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழை மாநிலங்கள் எவை என்பது குறித்த ஒரு பொருளாதார ஆய்வை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே ஊடகம்.

2015-16ம் ஆண்டின் பொருளாதார புள்ளி விவர அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2015- நடத்திய ஆய்வு. நாட்டிலேயே மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உள்ள மாநிலங்களில் 2வது இடத்தில் இருப்பது தமிழகம் உள்ளது. தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.9.48 லட்சம் கோடியாகும்.