இந்தூர் 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி- தொடரையும் கைப்பற்றியது!

Sep 25, 17

இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி.

இந்தியா வருகை தந்துள்ள ஆஸ்திரேலியா அணி சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணி 2-0 என முன்னிலையுடன் இந்தூரில் இன்று 3-வது போட்டியை எதிர்கொண்டது.

பேட்டிங் தேர்வு இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான வார்னரும் பின்ச்சும் களமிறங்கினர், அபார சதம் வார்னர் 44 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஆரோன் பின்ச் அபாரமாக ஆடி 124 ரன்களைக் குவித்தார். கேப்டன் ஸ்மித் 63 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 293 ரன்கள் குவிப்பு 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் குவித்தது. 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணி ஆட தொடங்கியது. ரஹானோ, ரோஹித் ஷர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே 70 ரன்களும் ரோஹித் ஷர்மா 71 ரன்களும் குவித்தனர். கேப்டன் கோஹ்லி 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாண்ட்யா ஹர்திக் பாண்ட்யா 72 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அப்போது மணீஷ் பாண்டேவுடன் டோணி கை கோர்த்தார். 47.5வது ஓவரில் வெற்றி இலக்கான 294 ரன்களை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. தொடரும் வசமானது.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது இந்திய அணி. அத்துடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.