இப்போ நான் திருந்திட்டேன்.. மனம் திறந்த இலியானா!

Sep 22, 17

மும்பை : தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துவந்த இலியானா, சமீபகாலமாகத் தான் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதுவரையிலான, தன் திரையுலகப் பயணங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இலியானா.

'நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால், இவற்றில் எனக்கு மனநிறைவைத் தந்த படம் என்றால் 'பர்பி' உள்ளிட்ட ஒருசில படங்களை மட்டுமே கூற முடியும்' என விரக்தியுடன் பேசியிருக்கிறார் இலியானா.