உங்கள் டேட்டாவை மிச்சப்படுத்தும் கூகுளின் புதிய ஆப் டேட்டாலி (Datally)

Dec 27, 17

கடந்த செவ்வாயன்று கூகுள் நிறுவனம், 'டேட்டாலி (Datally)' என்னும் பொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் ஆப்பை வெளியிட்டுள்ளது.

புதிய டேட்டாலி ஆப்பினை கொண்டு ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும். இந்த ஆப் ஸ்மார்ட்போனில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்படுகிறது, எந்தெந்த ஆப்கள் அதிகளவு டேட்டாவை பேக்கிரவுண்டில் பயன்படுத்துகின்றன என்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் மொபைல் டேட்டா வீணாவதை தடுக்க முடியும். 

கூகுளின் டேட்டாலி ஆப் மொபைல் டேட்டாவை சரியாக புரிந்து கொண்டு, கட்டுப்படுத்தி அவற்றை சேமிக்கும். டேட்டாலி ஆப் உங்களது ஸ்மார்ட்போனின் மொபைல் டேட்டா பயன்பாட்டை ஒரு மணி நேரம், தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் கண்காணிக்கும். இதைத் தொடர்ந்து அதிகளவு மொபைல் டேட்டாவினை சேமிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை டேட்டாலி ஆப் பரிந்துரை செய்யும். 

இந்த ஆப் மூலம் குறிப்பிட்ட ஆப் ஏதேனும் அதிகளவு டேட்டா பயன்படுத்துவதை கண்டால் ஆப்பில் ஒரு கிளிக் செய்து டேட்டா பயன்பாட்டை குறிப்பிட்ட ஆப்பில் மட்டும் நிறுத்த முடியும். மேலும் இதன் சிறப்பு அம்சம் வாடிக்கையாளர்கள் செல்லும் இடங்களில் கிடைக்கும் பொது வை-பை இருப்பதை நோட்டிபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும், இதன் மூலம் உங்களது டேட்டா பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.


கூகுளின் டேட்டாலி (Datally) ஆப், 5.0 மற்றும் அதனைவிட அதிகமான வெர்ஷன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும். இந்த ஆப்பின் அளவு 5எம்பி. இந்த ஆப்பை உபயோகிக்க மொபைலின் லொகேஷன், வை-ஃபை, போன் டிவைஸ் மற்றும் ஆப் வரலாறு ஆகியவற்றின் அனுமதி தேவைப்படுகின்றன.

இந்த ஆப் இந்தியா மக்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியா மக்கள் தங்களது டேட்டா செலவழிப்பில் மிகவும் கவனம் கொண்டவர்களாக உள்ளனர். டேட்டா சேவைகளில் உள்ள சிறந்த சேவையையும் தெரிந்துகொள்ள இந்த ஆப் மிகவும் உதவுகிறது.