எச்-1பி விசா கெடுபிடியை தொடர்ந்து இபி-5 விசா முறையிலும் மாற்றம்

Jan 29, 18

டிரம்ப் அரசின் புதிய திட்டம்.!!

எச்-1பி விசா கெடுபிடியை தொடர்ந்து இபி-5 விசா முறையிலும் மாற்றம்... டிரம்ப் அரசின் புதிய திட்டம்!


நியூயார்க்: கடந்த சில நாட்களாக எச்-1பி விசா முறையில் நிறைய மாற்றங்கள் வரும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனாலும் இதில் இன்னும் எந்த வகையான முறையான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. முக்கியமாக எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகள், குடும்பங்களுக்கு எந்த மாதிரியான விசா முறையை பின்பற்றலாம் என்ற குழப்பம் நிலவி வருகிறது. தற்போது இபி-5 விசா முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதற்காக முதலீடு செய்யப்படும் தொகை பல கோடி அளவிற்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

புதிய முறை எச்-1பி விசா போலவே இபி-5 விசாவையும் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். எச்-1பி விசா மூலம் அங்கு வேலை கேட்டு விண்ணப்பிப்பது போல அல்லாமல் இபி-5 விசா மூலம் அங்கு படித்து, அங்கேயே முதலீடூ செய்ய முடியும். இதனால் நாம் அங்கு தொழில் தொடங்க முடியும் அதே சமயம் அமெரிக்கர்களுக்கு நம் மூலம் வேலையும் கிடைக்கும்.

அதிகம் கடத்த சில நாட்களாக எச்-1பி விசா முறையில் கெடுபிடி நிலவியதால் இபி-5 விசா வாங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் ஆனது. 2016ல் 90 ஆக இருந்த எண்ணிக்கை 2017ல் 174 ஆக உயர்ந்தது. இதில் முக்கால் வாசி இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பயம் இந்த நிலையில் அமெரிக்காவின் குடியுரிமை அமைப்பு டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் சில தகவல்களை தெரிவித்தது. அதில் இனி இபி-5 விசா முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் என்ன மாதிரியான மாற்றம் என்று சொல்லப்படவில்லை.

அதிக பணம் தற்போது இபி-5 விசா பெற செய்யப்படும் முதலீட்டு தொகை அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்பு 6.4 கோடியாக இருந்த முதலீட்டு தொகை தற்போது 11.4 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த திடீர் 5 கோடி உயர்வு இந்தியர்களுக்கு அதிக பிரச்சனையை கொடுக்கும்.