ஒரு மில்லியன் லைக்குகளை அள்ளிய மெர்சல் டீசர்..!

Oct 16, 17

மெர்சல் படத்தின் டீஸர் காட்சிகள் வெளியாகி ஒரு மாதமான நிலையில்,அந்த டீஸர் வீடியோ யூ-டியூபில் 10 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது.

தெறி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் 3 வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மெர்சல்’. தீபாவளியன்று திரைக்குவரவுள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருப்பதை சொல்லி அறிய வேண்டியதில்லை.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு சான்றாக சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீஸர் பல சாதனைகளை புரிந்து வருகிறது. விஜய் மற்றும் அஜித் படங்களின் டீஸர்கள் வெளியானாலே இருதரப்பினரும் மாறி மாறி லைக்குகளையும், டிஸ் லைக்குகளையும் இட்டு வருவது வழக்கம். இந்நிலையில், உலகிலேயே அதிக லைக்ஸ் பெற்ற டீஸர் என்கிற பெருமையினை பெற்ற இத்திரைப்படத்தின் டீஸர் தற்போது 10 லட்சம் லைக்குகளை கடந்து சாதனை படைத்துள்ளது. மெர்சல் டீஸர் 2 லட்சம் டிஸ் லைக்குகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.