கடலுக்கு போய், மீன் கிட்ட பேசி நம்ம வழிக்கு கொண்டுவரும்..

Nov 11, 17

ஜெனிவா: சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று மீன்களிடம் பேசும் ரோபோட் ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது. ஜெனிவாவில் இருக்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறது.

இந்த ரோபோட் மீன்களிடம் பேசம் திறனுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மீன்களை திசை மாற்றவும் இந்த ரோபோட்கள் உதவும். இதை உருவாக்க ஐந்து வருடத்திற்கும் அதிமாக ஆகியதாக சுவிட்சர்லாந்த் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ரோபோட் இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.