கணவரின் கண் எதிரில் இளம்பெண் கற்பழிப்பு

Jan 23, 18

4 பேர் கொண்ட கும்பல் கைது

துப்பாக்கி முனையில் கணவர் மற்றும் மைத்துனரின் கண் எதிரே இளம்பெண்ணை கற்பழித்த 4 பேர் கொண்ட  கும்பல் கற்பழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கரம் டெல்லியில் மிகவும் அதிகரித்துள்ளது. சிறுமிகள் முதல் முதியவர் வரை பெண்கள் அங்கு தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாகவே டெல்லி மாறியுள்ளது.
 
இந்நிலையில், மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவவம் நேற்று இரவு டெல்லி குர்கான் பகுதியில் நடந்துள்ளது. குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கணவன், மனைவி மற்றும் மைத்துனர் ஆகிய மூவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். குர்கான் பகுதியில் உள்ள 56வது செக்டர், பிசினஸ் பார்க் டவர் அருகே காரை நிறுத்தி அப்பெண்ணின் கணவர் கீழே இறங்கியுள்ளார்.
 
அப்போது அந்த பக்கம் 2 கார்களில் 4 பேர் அங்கு வந்துள்ளனர். மேலும், அப்பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். அதோடு, காரிலிருந்து இளம்பெண்ணை வெளியே இழுத்து ஒருவர் மாறி  ஒருவர் என நான்கு பேரும் கற்பழித்தனர். அதன் பின், இதை வெளியே கூறினால் கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிவிட்டனர்.
 
அப்போது, அவர்களின் சென்ற கார் ஒன்றின் பதிவு எண்ணை கவனித்த அப்பெண்ணின் கணவர் இது குறித்து பின்னர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய குர்கான் பகுதி போலீசார், காரின் எண்ணை வைத்து சோஹ்னா பகுதியை சேர்ந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.