கத்தி முனையில் 10 சவரன் நகை ஐம்பதாயிரம் ரொக்க பணம் கொள்ளை.

Dec 27, 17

பெரியபாளையம் அருகே நள்ளிரவில் விவசாயியும், அவரது மனைவியும் தாக்கி கத்தி முனையில் 10 சவரன் நகை ஐம்பதாயிரம் ரொக்க பணம் கொள்ளை. மர்ம நபர்கள் இருவருக்கு காவல் துறை வலை வீச்சு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த  ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் விவாசாயியான இவர் நேற்று இரவு தனது மனைவி நிர்மலாவுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க வாசுதேவன் சென்ற பொது மர்ம நபர்கள் இருவர் அவரையம் அவரது மனைவியும் தாக்கி 10 சவரன் தாலி சரடு பீரோவில் இருந்த 50000ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பினர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரியபாளையம் காவல் துறையினர் கத்தி முனையில் கணவன் மனைவியை தாக்கி பணம் நகைகளை கொள்ளைஅயடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்