காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் உடல் நாளை சென்னை கொண்டுவரப்படுகிறது!

Oct 14, 17

கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபாலின் உடல் வரும் 15 ஆம் தேதி சென்னை கொண்டுவரப்படுகிறது.

பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உட்பட 45 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதர் தனபால் கடந்த 4 ஆம் தேதி கம்போடியாவில்  தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலை சென்னைக்கு கொண்டுவருவதில் சிக்கல் நிலவி வந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உதவியால் தற்போது ஸ்ரீதர் தனபாலின் உடல் கம்போடியாவிலிருந்து சென்னைக்கு வரும் 15 ஆம் தேதி கொண்டுவரப்படுகிறது.