சவுதியில் ஊழல் செய்த 200 பேர் கைது! - விரட்டி விரட்டி கைது செய்யும் இளவரசர்

Nov 11, 17

சவுதியில் மேலும் 12 பேர் 100 பில்லியன் டாலர் வரையில் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் 200 பேர் வரை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் அண்மையில் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின்னர் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சவுதியில் அரச குடும்பத்தில் உள்ள பலர் ஊழலில் ஈடுபட்டு வருவதாக சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சவுதியில் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் முகம்மது பின் சல்மான் இறங்கிவிட்டார். அதன் தொடக்கமாக இவர் தலைமையில் சமீபத்தில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.