செம த்ரில்லாக செல்லும் டெஸ்ட் போட்டி...

Nov 20, 17

கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் சறுக்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் மீண்டு வந்தது.

முதல் இரண்டு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த இரண்டு நாள் ஆட்டமும் தடையில்லாமல் நடந்துள்ளது. இலங்கை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக கலக்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியதன் மூலம் இந்திய அணி இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருந்தது. மிகவும் த்ரில்லாக சென்ற இந்த போட்டி தற்போது டிராவில் முடிந்து இருக்கிறது.