சோமாலியாவில் நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு!

Oct 16, 17

சோமாலியா குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. சோமாலியா தலைநகர் மகாடிஷூ நகரில் வாகனம் ஒன்றில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்து வெடிக்கச் செய்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல் என சோமாலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு அல் கொய்தாவின் பிரிவான அல் ஷபாப் தீவிரவாத அமைப்பே இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பால் பல்வேறு கட்டடங்கள் நொறுங்கியுள்ளன. இதில், 276 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.