டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Oct 04, 17

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில், 38 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா இடம் பிடித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மூன்று, டி20 போட்டிகளில் விளையாட உள்ளன. முதல்போட்டி வரும் 7ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ள நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், நெஹ்ரா, அக்சர் படேலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டி20 சிறப்பு நிபுனர் என்ற அழைக்கப்டும் சுரேஷ் ரெய்னா மற்றும் அமித் மிஸ்ரா உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.