ட்ரம்ப்க்கு மனநலம் சரியில்லை.. விளாசித் தள்ளும் குழந்தைசாமி!

Sep 22, 17

ப்யோங்கியாங் : வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அதிபர் ட்ரம்ப்பை மனநலம் இல்லாதவர் என்று கிம் ஜாங் உன் விமர்சித்துள்ளார்.

வடகொரியா தொடர் அணுஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன்காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பல வழியில் மிரட்டல் விடுத்து வருகிறது. ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவருகிறது. இந்நிலையில், ஐ.நா. பொதுசபையில் கடந்த 19-ம் தேதி முதல்முறையாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தாவிட்டால் அந்நாட்டை முழுமையாக அழிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ராக்கெட் மனிதர் போல செயல்படுகிறார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.