தமிழ்நாடு வண்ணார் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம்

Jun 19, 17

தமிழ்நாடு வண்ணார் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் பேரவையின் நிறுவனரும் மாநில அமைப்பாளருமான மணிபாபா தலைமையில் மாவட்ட செயலாளர் மாயாண்டி முன்னிலையில் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இச்சமூகத்தினர் 30 லட்சம் பேர் உள்ளதாகவும், இச்சமூகத்தை எல்லா கட்சியினரும், மத்திய மாநில அரசுகள் புறக்கணிப்பதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தங்கள் சமூகத்திற்கு அருந்ததியினருக்கு வழங்கி உள்ளது போல் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், நவீன சலவைக் கூடம் அமைக்க 20 லட்ச ரூபாய் மானியக் கடன் வழங்க வேண்டும், ஆறு, குளம், குட்டைகள் ஆக்கிரமிப்புகள், மீட்டுக் கொடுக்க வேண்டும், தூத்துக்குடி தாளமுத்துநகர் வண்ணார்பேட்டையில் உள்ள 9 ஏக்கர் சலவைக் கூட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு இட்டு உள்ள நீதிமன்ற ஆணையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.