தரவரிசையில் சரிந்தார் புதுமாப்பிள்ளை கோலி

Dec 27, 17

சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டி20 போட்டிகளுக்கான அணிகள், பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் கோலி, 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் முதலிடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் லீவிஸ் 2வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா 3வது இடத்தில் உள்ளார்.