தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதான் பாகிஸ்தான்.. ஐநாவில் இந்தியா சரமாரி குற்றச்சாட்டு!

Sep 22, 17

ஜெனிவா: சர்வதேச அளவில் தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடுதான் பாகிஸ்தான் என ஐநா அவைக் கூட்டத்தில் இந்தியா சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.

ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரவாதத்தை இந்தியா தூண்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டுக்கும் இந்தியா தக்கபதிலடி கொடுத்துள்ளது.