துடிக்க துடிக்க இறந்த நோயாளிகள்... ரசித்து விளையாடிய கொடூர ஆண் நர்ஸ்

Nov 11, 17

துடிக்க துடிக்க இறந்த நோயாளிகள்... ரசித்து விளையாடிய கொடூர ஆண் நர்ஸ்

பெர்லின்: வாழ்க்கை போர் அடித்த காரணத்தால் நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு அவர்களின் மரணத்தை ரசித்து விளையாடியதாக கொடூர மனம் படைத்த ஆண் நர்ஸ் ஒருவர் பேட்டியளித்துள்ளதார். ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நீல்ஸ் ஹோகெல் என்ற நபர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு இவர் ஒரு நோயாளிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்வதைக் கண்ட பெண் நர்ஸ் நீல்ஸ் ஹோகெல் மேல் புகார் செய்தார்.

டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு அவர்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று மீண்டும் பிழைக்க வைத்துள்ளார். ஆனால், அவர்களில் 100.க்கும் மேற்பட்டோர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டனர்.