தெறிக்கவிட்ட இந்தியா.. மெர்சலான ஆஸ்திரேலியா

Sep 22, 17

கொல்கத்தா: இந்தியா - இலங்கை தொடர் துவக்கத்தில் இந்தியா ஒயிட் வாஷ் செய்யும் என்று எவரும் கணிக்கவில்லை. ஆனால், டெஸ்ட், ஒருதினப் போட்டி, டி-20 என 9-0 கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி.

அதே நேரத்தில் வங்கதேசம் சென்ற ஆஸ்திரேலியா அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. போட்டிக்கு முன்பாக, குட்டி அணியான வங்கதேசத்தை ஆஸ்திரேலியா துவம்சம் செய்துவிடும் என்று கணித்தார்கள். ஆனால், முதல் டெஸ்டில் வங்கதேசம் வென்று அசத்தியது. இரண்டாது டெஸ்டில் வென்று ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து ஒருவழியாக பெருமூச்சுவிட்டது.