நண்பரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் நடிகை நமீதா!

Nov 11, 17

தனது நீண்டகால நண்பர் வீரேந்திராவை வரும் 24-ந் தேதி நடிகை நமீதா திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட படவுலகில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது 36 வயதாகிறது. இவர் தனது நீண்டகால நண்பர் வீரேந்திராவை வரும் 24-ந்தேதி மணக்கவுள்ளார். 

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஓன்றில் நடிகை நமீதாவுடன் கலந்து கொண்ட நடிகை ரைசா, இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவு மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நமீதாவும், அவரை திருமணம் செய்யவுள்ள வீரேந்தரும் இடம் பெற்றுள்ளனர்.