நிதி அமைச்சகத்திடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை

Sep 23, 17

பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெட்ரோலிய பொருட்களுக்கு தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறை சரியானது எனக் கூறிய அவர், மத்திய அரசு விதிக்கிற வரியில் 42 சதவீதம், மாநில அரசுகளுக்கு கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். 

சர்வதேச அளவிலான விலையின் அடிப்படையில்தான் உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதாக தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். எனவே, சர்வதேச சந்தையின் நிலையைப் பொறுத்து பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் ஏற்படுவதாக தெரிவித்தார்.