நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு

Oct 24, 17

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகிய இரு புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தொடருடன் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ள ஆசிஷ் நெஹ்ராவுக்கு, டெல்லியில் வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் மட்டும் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சஹால் ஆகிய இருவருக்கும் டி20 தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

டி20 அணி

விராத் கோலி (கேப்டன்), தவான், ரோஹித் சர்மா, ராகுல், மனிஷ் பாண்டே, ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்டிக் பாண்ட்யா, அக்ஸர் பட்டேல், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமது சிராஜ், சாஹல், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெறுவர்.

இதேபோல் அடுத்து நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட அணியில் அஷ்வின், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். 

டெஸ்ட் அணி

விராத் கோலி (கேப்டன்), முரளி விஜய், தவான், ரோஹித் சர்மா, ராகுல், புஜாரா, ராஹானே, விர்திமான் சாஹா, அஸ்வின், ஹர்டிக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெறுவர்.