பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியால் குத்தி கொலை செய்த காமுகன்!

Oct 14, 17

பீகார் தலைநகர் பாட்னாவில் பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியால் குத்தி அவரைக் கொன்ற இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள சிற்றூரில் 35 வயதுப் பெண் ஒருவர் இயற்கை உபாதையை கழிக்க வயல்வெளி ஓரமாக சென்ற போது, 22 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். 

இதற்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் இரும்புக் கம்பியால் பெண்ணின் பிறப்புறுப்பில் குத்தியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த மனிதத் தன்மையற்ற நிகழ்வு குறித்துப் பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்துக் காவல்துறையினர் இளைஞரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.