பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியார்!

Sep 27, 17

ஹைதராபாத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரச்சகொண்டா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வியாபாரத்தில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஸ்ரீராம் சர்மா என்ற சாமியாரை தொடர்பு கொண்டுள்ளார். தனது குடும்ப பாரத்தை நீக்குவதற்காக சென்ற அந்த பெண்ணிடம் சாமியார் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சாமியாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.