பேஸ்புக்கில் நீங்கள் 'லைக்' கொடுத்த எல்லா படங்களையும் பார்க்கும் வழிமுறைகள்

Jan 29, 18

மொபைல்போன் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய இரண்டிலும், விருப்பம் கொடுத்த புகைப்படங்களைக் காணும் முறைகளைக் பட்டியலிட்டு அளித்துள்ளோம்.

பேஸ்புக்கில் நீங்கள் 'லைக்' கொடுத்த எல்லா படங்களையும் பார்க்கும் வழிமுறைகள்

சமீபகாலமாக பேஸ்புக்கில் பல்வேறு புதுப்பிப்புகள் அளிக்கப்பட்டு, நமக்கு ஏற்ற ஒரு தளமாக உருமாறி வருகிறது. பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், புதுப்பிப்புகள், இணையதள பக்கங்கள் மற்றும் பிற இணையதள காரியங்கள் ஆகியவற்றை நாம் பதிவேற்றம் செய்துள்ளோம்.


மற்றவர்களின் ஆயிரக்கணக்கான இடுகைகளையும் நாம் விருப்பம் தெரிவித்துள்ளோம். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் விருப்பம் (லைக்) கொடுத்த புகைப்படங்களை மட்டும் காண வேண்டுமானால், அதற்கேற்ற செயல்பாட்டு நுழைவின் உதவி தேவைப்படுகிறது. எனவே மொபைல்போன் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய இரண்டிலும், விருப்பம் கொடுத்த புகைப்படங்களைக் காணும் முறைகளைக் கீழே பட்டியலிட்டு அளித்துள்ளோம்.

ஸ்மார்ட்போன்களில் காண (ஆண்ட்ராய்டு / ஐஓஎஸ்)

படி 1: உங்கள் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் அப்ளிகேஷன் இருந்தால் அதைத் திறக்கவும். அப்படி இல்லாத பட்சத்தில் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து அதை பதிவிறக்கம் செய்யவும். படி 2: திரையின் முனையில் காணப்படும் மூன்று வரிகளைக் கொண்ட மெனு பொத்தானை தட்டவும். அதன்பிறகு மெனுவின் மீது உங்கள் பெயரைத் தட்டவும். படி 3: உங்கள் டிஸ்ப்ளே படத்திற்கு கீழே உள்ள செயல்பாட்டு நுழைவு (ஆக்டிவிட்டி லாக்) பொத்தானை தட்டவும். இதன்மூலம் கடந்த பல மாதங்களாக அல்லது ஆண்டுகளாக, உங்கள் செயல்பாடுகளைக் குறிக்கும் ஒரு திரைக்கு உங்களை அழைத்து செல்லும்.

படி 4: அதில் தட்டிய உடன், குறிப்பிட்ட காலஅளவில் பேஸ்புக்கில் உங்கள் செயல்பாட்டைக் குறிக்கும் ஒரு நுழைவை (லாக்) காணலாம். படி 5: இப்போது நாம் "விருப்பங்களுக்காக" தேடுவதால், திரையின் மேற்பகுதியை ஒட்டியுள்ள ஃபில்டர் பொத்தானைத் தட்டி, அதில் விருப்பங்கள் (லைக்ஸ்) என்று உள்ளிடவும். படி 6: இப்போது முக்கிய செயல்பாட்டு நுழைவு திரைக்கு திரும்ப வந்து, உங்களுக்கு தேவையான மாதம் அல்லது ஆண்டில் "விருப்பம்" கொடுத்தவற்றை காண தேதியை உள்ளிடவும். படி 7: உங்களுக்கு விருப்பமில்லை (அன்லைக்) என்று அளிக்க விரும்பினால், ஒரு காரியத்தின் வலதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கி அம்புக்குறியை (டவுன்-ஏரோ) தட்டவும். அதன்பிறகு விருப்பமில்லை என்று தட்டவும்.

டெஸ்க்டாப்பில் காண படி 1: பேஸ்புக்கிற்கு சென்று, மேலே உள்ள உங்கள் புரோஃபைலை தட்டவும். படி 2: உங்கள் புரோஃபைலில், செயல்பாட்டு நுழைவை காணும் பொத்தானை கிளிக் செய்யவும். படி 3: விருப்பங்களை ஃபில்டர் செய்ய வகையில், திரையின் இடதுபுறத்தில் உள்ள விருப்பங்கள் பொத்தானை கிளிக் செய்யவும். படி 4: இப்போது, நீங்கள் விருப்பம் கொடுத்த எல்லா இடுகைகளையும் காணலாம். அதில் ஏதாவது ஒன்றை விருப்பமில்லை என்று குறிக்க விரும்பினால், "திருத்தம்" ஐகானை கிளிக் செய்து, அந்த இடுகையை விருப்பமில்லை என்பதை தட்டலாம்.