பொதுவாக்கெடுப்பு மூலம் தமிழ் ஈழம் அமைக்க வேண்டும்.. ஜெனிவாவில் வைகோ உரை!

Sep 23, 17

ஜெனிவா: தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் வைகோ பேசியதாவது: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27ம் தேதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அவர்களின் உதவி நாடி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.