மாரி-2 திரைப்படத்தில் ஹீரோயினாகும் சாய் பல்லவி!

Sep 29, 17

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் மாரி-2 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிப்பில் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாரி’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் இயக்குகிறார்.  

இயக்குநர் பாலாஜி மோகன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் மாரி-2 திரைப்படத்தில் பிரேமம் புகழ் மலர் டீச்சர் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பால் சாய் பல்லவியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரேமம் படத்தில் பிரபலமான நடிகை சாய் பல்லவி தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கதைக்காக காத்திருந்தார். இந்நிலையில் நடிகர் தனுஷ் உடன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது தனுஷ் ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயாகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.