. ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கும்படி திமுகவுக்கு பாஜக கோரிக்கை

Jun 21, 17

குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவை பாஜக கோரியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தனது வேட்பாளருக்கு ஆதரவை திரட்டி வருகிறது. இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ராம்நாத் கோவிந்த்துக்கு கட்சி வேறுபாடின்றி ஒருமித்த ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.