லண்டனுக்கு சென்ற உலகக் கோப்பை டிராபி!

Jan 23, 18

தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணிக்க உள்ளது

லண்டனுக்கு சென்ற உலகக் கோப்பை டிராபி!

உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்க உள்ள நிலையில் இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட உள்ள சாம்பியன் கோப்பை உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணிக்க உள்ளது. முதல் கட்டமாக லண்டனுக்கு நேற்று டிராபி கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 24-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகருக்கு டிராபி பயணமாகிறது.