லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சையத்தை பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும்

Jan 20, 18

சட்டபூர்வமான நடவடிக்கை தேவை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தீவிரவாதி ஹபீஸ் சையத்தை பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும்: அமெரிக்கா அதிரடி

ஹபீஸ் சையத் மீது பாகிஸ்தான் பிரதமர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உள்துறை செய்தித்தொடர்பாளர் ஹேதர் நோவர்ட் (Heather Nauert) தனது பேட்டியில் கூறியிருப்பதாவது ’ ஷாகித்கான் அப்பாஸி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ஹபீஸ் சையத்தை ’சாஹிப்’அதாவது சார் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் முக்கியமான தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட ஹபீஸ் சையத் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சையத். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக செயல்பட்ட. ஹபீஸ் சையத் மீது பாகிஸ்தான் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் . பாகிஸ்தான் அரசின் மீதான எங்களின் நிலைபாடு எப்போது மாறியதில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம். என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கிய 2 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அரசு ரத்து செய்தது. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த முடிவை எடுத்ததாக அமெரிக்கா கூறியது குறிப்பிடத்தக்கது.