வங்கிக்கணக்குகளுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்!

Oct 24, 17

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம், என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் இல்லை என,  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளதாக, ஊடகங்களில் வெளியான தகவல் தவறு என்றும், ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு, ஆதார் அவசியம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க, வரும் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.