விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபு தேவா!

Sep 23, 17

தலைப்பு கொஞ்சம் மிஸ்லீட் பண்ற மாதிரிதான் இருக்கும்... இது நடிகர் விஜய் அல்ல.. இயக்குநர் விஜய். பிரபு தேவாவும் விஜய்யும் ஏற்கெனவே தேவி படத்தில் இணைந்து வெற்றியை ருசித்தனர்.

இப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் விஜய் டீமில் பெரிய மாற்றம் இந்தப் படத்தில். விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இதில் இல்லை. மாறாக சாம் சிஎஸ் என்பவர் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஹிந்தியில் 'லவ் இன் டோக்யோ', 'ஜூகுனு' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ஜாம்பவான் 'பிரமோத் பிலிம்ஸ்' இப்படத்தை, 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' ரவிச்சந்திரனுடன்