விரைவில் வருகிறது விலை குறைந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் Z2 காம்பாக்ட் .!!

Feb 02, 18

இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வருகிறது விலை குறைந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் Z2 காம்பாக்ட்.!!

சோனி நிறுவனம் அதன் சமீபத்திய மாதிரிகளான, எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2, எக்ஸ்பீரியா ஏக்ஏ2 அல்ட்ரா மற்றும் எக்ஸ்பீரியா எல்2 ஆகிய ஸ்மார்ட்போன்களை சிஇஎஸ்2018 நிகழ்வில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் வெளியான தகவலின்படி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது சுமார் ரூ.22,300/-க்கும் எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது சுமார் ரூ.28,700/-க்கும் மற்றும் எக்ஸ்பீரியா எல்2 ஆனது கிட்டத்தட்ட ரூ.16,000/-க்கும் விற்பனைக்கு வரலாம். தற்சமயம் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 காம்பாக்ட் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளத இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு எப்சிசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 காம்பாக்ட் : சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 காம்பாக்ட் சாதனம் 5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு 18:9என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845: வெளிவந்த தகவலின் அடிப்படையில் எக்ஸ்இசெட்2 காம்பாக்ட் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம், மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

4ஜிபி ரேம்: இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கேமரா: சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 காம்பாக்ட் ஸ்மார்ட்போனில் 19எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் கசிந்துள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்: வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்: சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 காம்பாக்ட் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.