​அமெரிக்காவில் 4 ஆண்டுகளில் 2.5 கோடி கரு கலைப்பு - அதிர்ச்சித் தகவல்!

Sep 29, 17

அமெரிக்காவின் பொருளாதார உதவிகள் நிறுத்தப்பட்டதால் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புக்களில் பாதி பாதுகாப்பற்றவையாக மாறியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கருக்கலைப்பு செய்யும் பெண்களில் பாதிப்பேர் பாதுகாப்பற்ற முறையில் சிகிச்சை பெறுவதாகப் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டரைக் கோடி கருக்கலைப்புக்கள் இது போல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இப்போது அந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.