​ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் மேரி கோம்..!

Nov 09, 17

பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வியட்நாம் நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 48 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற மேரிகோம், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை சந்தித்தார் மேரி கோம், முதல் ரவுண்டில் இரு வீராங்கனைகளும் ஈடுகொடுத்து ஆடினர்.

பின்னர் அடுத்த இரண்டு ரவுண்டுகளிலும், மேரி கோம் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய மேரி கோம், இறுதி ரவுண்டில் கொரிய வீராங்கனை பீகிம்-ஐ 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். 

இதன்மூலம் ஆசிய குத்துச்சண்டை போட்டித்தொடரில் இதுவரை 5 தங்கப்பதக்கங்களை வென்று மேரிகோம் சாதனை படைத்துள்ளார்.

3 குழந்தைகளுக்கு தாயான 34 வயது மேரி கோம், கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறத் தவறிய பின்னர், அவருடைய குத்துச்சண்டை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்பட்டது.

இருப்பினும் தற்போது ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். 

கடைசியாக 2014ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 54 கிலோ மகளிர் ஃபிளைவெயிட் எடைபிரிவில் போட்டியிட்டு தங்கம் வென்ற மேரி கோம் அப்பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையையும் படைத்தார்.

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 6 பதங்கங்கள் வென்று மேரி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.