​ஆஷா போஸ்லேவுக்கு மெழுகுச்சிலை!

Oct 04, 17

புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் உருவ மெழுகுச்சிலை, டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை, ஆஷா போஸ்லே நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கின்னஸ் சாதனைக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருந்தாலும், தனது மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது அதிக மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்தார். 

தற்போது 84 வயதாகும் ஆஷா போஸ்லே, இதுவரை 20 மொழிகளில்  11 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி உள்ளார். இதற்காக, கடந்த 2011ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்திலும் இவர் இடம் பிடித்தார்.

டெல்லி அருங்காட்சியகத்தில் ஏற்கனவே மர்லின் மன்றோ, டாம் குரூஸ், ஏஞ்சலினா ஜோலி, மைக்கேல் ஜாக்சன், அமிதாப்பச்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.