​ஓராண்டுக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது தாய்லாந்து மன்னரின் உடல்!

Nov 11, 17

தாய்லாந்து மன்னர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மரணமடைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் உடல் நேற்று பாங்காக்கில் அடக்கம் செய்யப்பட்டது. புத்த மத சம்பிரதாயங்களின் படி இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் தொடங்கி 5 நாட்கள் நடக்கின்றன. 

மன்னரின் உடலை அடக்கம் செய்வதற்காக சொர்க்கலோகம் போன்ற பிரம்மாண்ட மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

இந்நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் இன்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். கருப்பு உடையணிந்து வந்த அவர்கள், மன்னரை இழந்துவிட்ட சோகத்தில் கண்ணீருடன் தவித்ததைக் காணமுடிந்தது.