​கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

Dec 14, 17

கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமீருள் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அணில் குமார், அமீருள் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான தலித் மாணவி ஜிஷா, கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி, தனது வீட்டில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் அஸ்ஸாமில் இருந்து கேரளாவிற்கு வந்து பணிபுரிந்து வந்த 23 வயது அமீருள் இஸ்லாம் என்பவர் கைது செய்யப்பட்டார். 

அவர் மீதான குற்றம் நிரூபணமானதை அடுத்து, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவி ஜிஷா கொலை செய்யப்பட்ட விவகாரம் கேரளாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கேரளாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தன. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள இத்தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

இந்நிலையில், தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜிஷாவின் தாயார், தனது மகளுக்கு நேர்ந்ததைப் போன்று எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என கூறினார்.