​ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு..!

Oct 24, 17

ஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட  ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி, 312 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது. 

வடகொரியா மீது உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, வடகொரியாவுக்கு எதிரான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 44 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். 

நாடராளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு வெறும் 8 சதவீதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். ஆதரிப்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை என சுமார் 20 சதவீதம் பேர் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, மக்கள் செல்வாக்கு உள்ளபோதே நாடாளுமன்ற தேர்தலை நடத்தி மீண்டும் பிரதமராக தீர்மானித்துள்ள ஷின்சோ அபே கடந்த மாதம் 28-ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையை கலைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே, பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நடைபெற்றது. 

மொத்தமுள்ள 465 இடங்களில் சுமார் 1,200 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணக்கையில், பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில், மொத்தமுள்ள 465 இடங்களில் ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி 312 இடங்களை பெற்றது. 

மூன்றில் இரண்டு பங்கு இடம் கிடைத்துள்ளது என்பதால் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. ஷின்சோ அபே மீண்டும் பிரதமராவது உறுதி என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

வடகொரியாவை ஜப்பான் அமெரிக்கா கூட்டாக இணைந்து எதிர்க்க திட்டமிட்டுள்ளனர் அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே  அபே வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் பங்குச்சந்தை ஏறுமுகமாக உள்ளது.