​பத்ம பூஷண் விருதுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெயர் பரிந்துரை!

Sep 27, 17

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை பத்ம பூஷண் விருதுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான பத்ம விருதுகளை அளித்து கவுரவித்து வருகிறது மத்திய அரசு. 

பாரத் ரத்னா, பத்ம விபூஷணுக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக பத்ம பூஷண் கருதப்படுகிறது. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு, பத்ம பூஷண் விருது வழங்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 

ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ஏற்கனவே பத்மஸ்ரீ, கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் தோனியின் பெயரும் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

சிந்துவுக்கு முன்னதாக சாய்னா நேவால் மற்றும் புல்லேலா கோபிசந்த் உள்ளிட்டவர்களும் பத்ம பூஷண் விருது பெற்றுள்ள பேட்மிண்டன் வீரர்கள் ஆவார்கள்.