​விக்ரம் வேதா கதையில் இந்தியில் நடிக்கிறாரா ஷாருக்?

Sep 27, 17

விக்ரம் வேதா படத்தில் பாலிவுட் ரீமேக்கில் நடிகர் ஷாரூக்கான் நடிக்க உள்ளதாக தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

தமிழில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த விக்ரம் வேதா படத்தின் உரிமையை ஷாருக்கான் பெற்றுள்ளதாகவும், அரே இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதனை மறுத்துள்ள படக்குழுவினர், இதுவரை படத்தின் இந்தி உரிமையை யாருக்கும் அளிக்கவில்லை எனவும், படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளது.