​விளைச்சல் குறைவு எதிரொலி - காய்கறிகள் விலை உயர்ந்தது!

Oct 16, 17

விளைச்சல் குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக சென்னை கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு காய்கனி வணிக வளாகத்தில் அதிகபட்சமாக சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய் வரையும், மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 

மேலும், முருங்கைக்காய் கிலோ 110 ரூபாயை எட்டியுள்ளது. உற்பத்தி குறைவு மட்டுமின்றி ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் பெய்துவரும் மழை காரணமாகவும் விலையேற்றம் உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி காய்கறிகளின் விலை உயர்வு பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விலை நிலவரம்:

 • தக்காளி 40
 • கத்தரிக்காய் 50
 • வெங்காயம் 35
 • சாம்பார் வெங்காயம் 120 - 150
 • உருளை 20
 • வெண்டை 30
 • கேரட் 50
 • பீன்ஸ் 60
 • அவரை 60
 • பாகற்காய் 40
 • வெள்ளரி 30
 • புடலை 30
 • சீனி அவரை 30
 • பூசணி 20
 • வாழைக்காய் 10 (1எண்ணம்)
 • மல்லி இலை 30 (1 கட்டு)
 • புதினா 10
 • பீட்ருட் 40
 • மாங்காய் 100
 • சேனை 40
 • கோஸ் 40
 • மிளகாய் 50